மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நிறுவப்பட்டுள்ள நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திருப்பெரும்துறை
திறந்தவெளிச் சிறைச்சாலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக
கிராமிய தொழில்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றிசானா சாரங்கன்
சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க தலைவர் சடாற்சரராசா, மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், மதகு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமசிவம் முரளீதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மதகு நிறுவனத்தின் 10 இலட்சம் நிதி அனுசரனையில் நிறுவப்பட்ட குறித்த நெசவு நிலையத்திற்கான தளபாட வசதிகளை கிராமிய தொழில்துறை திணைக்களம் வழங்கியதுடன், குறித்த நெசவுப் பயிற்சியினை மேற்கொள்ளும் சிறைக்கைதிகளுக்கு பயிற்சியின் போது கிராமிய தொழில்துறை திணைக்களம் ஊதியம் வழங்கவுள்ளதுடன், இவர்கள் சிறையில் இருந்து வெளியோறும் போது சுய தொழில் முயற்சியொன்றை கற்றுக்கொண்டவர்களாக தமது வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஈட்ட வாய்ப்பாக இந்த விடையம் அமையுமென இதன் போது பயிற்சியாளர்கள் சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட மதகு நிறுவனத்திற்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.