> முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அனர்த்த நிவாரணத்திற்கு நிதியுதவி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அனர்த்த நிவாரணத்திற்கு நிதியுதவி!

பிரதமர் ஹரிணியிடம் Rs. 250 மில்லியன் நிதி காசோலை கையளிப்பு | நாடு மீள வழமை நிலைக்கு வர நடவடிக்கை



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு தனது பங்களிப்பாக Rs. 250 மில்லியன் அளவில் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த நிதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றத்தினால் ஒதுக்கப்பட்ட காசோலை வடிவில், 2025 டிசம்பர் 08 அன்று பிரதமர் ஹரிணி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி தலைமையில், மன்ற பணிப்பாளர் சபையும் இத்துடன் கலந்து, நாட்டை அனர்த்தத்திற்குப் பின் வழமை நிலைக்கு மீள கொண்டு வர நடவடிக்கைகளில் உதவ உறுதிமொழி தெரிவித்துள்ளனர்.