> வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியில் கோறளைப்பற்று பிரதேசசபை.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியில் கோறளைப்பற்று பிரதேசசபை.



COVID-19 வைரஸ் பரம்பலை தடுக்கும் நோக்கில் நாடலாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இவ் வேளையிலும் மீனவர்களுக்கான மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில் மீனவர்களின் பிரசன்னம் அதிகமாக உள்ள கோறளைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக வளாகத்தினுள் தொற்று நீக்கி திரவம் விசிறும் நடவடிக்கையுடன் இணைந்ததாக திண்மக்களிவுளை அகற்றும் நடவடிக்கைகளும் இன்று மேற்கொள்ளப்பட்டது.
சபையின் தவிசாளரின் பணிப்பிற்கமைய மேற்கொள்ளப்பட்ட குறித்த செயற்றிட்டத்தில் விஷேட அதிரடிப்படையினர், இலங்கை கடற்படையினர் மற்றும் பொதுச்சுகாதார வைத்திய அத்தியட்சகர், பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் ஊழியர்களும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது